ஒன்றிற்கு மேற்பட்ட மின்னஞ்சல்களுக்கு ஒரே தடவையில் பதில் அனுப்புவதற்கு
எனினும் இச்சேவையின் போது பொதுவாக ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மின்னஞ்சல்களுக்கு பதில்(Reply) அனுப்புவது இதுவரை காலமும் சாத்தியமற்ற ஒரு செயற்பாடாகவே இருந்து வந்துள்ளது.
ஆனால் தற்போது மின்னஞ்சல் சேவை வழங்குனர்களில் முன்னணியில் திகழும் கூகுளின் ஜிமெயில் சேவையில் இது சாத்தியமாகியுள்ளது. இதற்காக Batch Reply for Gmail எனும் பிரத்தியேகமான கூகுள் குரோம் நீட்சி ஒன்றினை நிறுவிக்கொள்ள வேண்டும்.
இதனை நிறுவிய பின்னர் படத்தில் காட்டியவாறு More பொத்தானுக்கு அடுத்ததாக Reply எனும் பொத்தான் தோன்றியிருக்கும்.
தற்போது பதில் அனுப்பவேண்டி மின்னஞ்சல்களை தெரிவு செய்து Reply பொத்தானை அழுத்தியதும் Pop-Up விண்டோ ஒன்று தோன்றும், அதில் காணப்படும் Send பொத்தானை அழுத்தியதும் தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் குறித்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுவிடும்.
Comments
Post a Comment