பொலநறுவையில் பெய்த சிவப்பு மழை - பதற்றத்தில் சிங்கள மக்கள்


 பொலன்நறுவை மாவட்டத்தில் மனம்பிட்டிய பிரதேசத்தில் இன்று காலை 8:00 மணியளவில் சிவப்பு மழை பெய்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சிவப்பு மழை தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கு பெய்துள்ளது.

இந்நிலையில் நேற்று மொனராகல மாவட்டத்தில் செவனகல பிரதேசத்தில், இந்திகொலபெலஸ்ஸ பகுதியிலும் சிவப்பு மழை பெய்ததாக அக்கிராமத்து மக்கள் தெரிவித்தனர்.
நேற்றும், இன்றும் இவ்வாறு சிவப்பு மழை பெய்ததால் குறிப்பிட்ட கிராமத்து மக்கள் பீதியடைந்து ஏன் இவ்வாறு சிவப்பு மழை பெய்கின்றது என ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து இதனால் கிராமத்திற்கு ஏதாவது அழிவு ஏற்படுமா என அச்சமடைந்துள்ளனர்.
இவ் அச்சம் தற்போது குறிப்பிட்ட இரு மாவட்ட மக்களுக்கும் பரவியுள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சில வருடங்களுக்கு முன் இந்தியா கேரளாப் பகுதியிலும் இவ்வாறு சிவப்பு மழை பெய்ததாக அறியமுடிகின்றது.
இந்நிலையில் இது தொடர்பில் இலங்கை காலநிலை அவதான நிலைய பணிப்பாளர் எஸ்.ஆர் ஜெயசேகர கருத்து தெரிவிக்கையில், 
சாதாரணமாக மீன்மழை ஏற்படுவதைப் போல, மேகத்துக்கு நீர் உறிஞ்சப்படும் போது, சில நிற திரவியங்களும் கலந்து உறிஞ்சப்படுவதால் இவ்வாறான மழை வீழ்ச்சி ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறு ஏற்பட வேறு காரணங்கள் உள்ளதா? என்பது தொடர்பில் மழைவீழ்ச்சி குறித்து முழுமையான பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னரே மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே இவ்வாறான பல நிறங்களிலான மழை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

Comments

Popular posts from this blog

iOS 7 vs iOS 6 – Side By Side Visual Comparison [IMAGES]

''டாடா''வின் பைசா செலவில்லாமல் காற்று எரிபொருளில் இயங்கும் கார்!

Top 3 Services For Jailbreaking iPhone 5, 5c, 5s