விண்டோஸ் 8 இயங்குதளத்திற்காக புதிய மொனிட்டரை களமிறக்கும் LG
இதனை தொடர்ந்து பல நிறுவனங்கள் புதிய விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இயங்கும் புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தி கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் தற்போது விண்டோஸ் 8 இயங்குதளத்திற்காக புதிய மொனிட்டரை LG களமிறக்கி உள்ளது.
இந்த புதிய மொனிட்டருக்கு Touch 10 Monitor(இடி83) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
23 இன்ச் அளவில் வரும் இந்த மொனிட்டரை 10 விரல்களாலும் இயக்கக்கூடிய வகையில் Multi Touch வசதி உள்ளது.
Multi Touch வசதி கொண்ட இந்த புதிய பெரிய மொனிட்டர் இதைப் பயன்படுத்துவோருக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும் என்று LG-இன் துணை இயக்குனர் ஜே.ஜே. லீ கூறியிருக்கிறார்.
இந்த திரையில் கீபோர்டு உள்ளதால் இந்த மொனிட்டரிலேயே 10 விரல்களாலும் டைப் செய்ய முடியும்.
மேலும் இந்த மொனிட்டர் Music Application-களையும் கொண்டிருக்கிறது. இந்த பெரிய மொனிட்டரில் திரைப்படங்கள் பார்ப்பது மற்றும் வீடியோ கேம் விளையாடுவது ஆகியவை பரவசத்தைக் கொடுக்கும் என்று நம்பலாம்.
அடுத்த மாதம் இந்த மொனிட்டர் கொரியாவில் களமிறங்க இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் மற்றும் மற்ற நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
Comments
Post a Comment