சுவிஸில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
வாட் மாநிலத்தில் உள்ள மலைக்கிராமமான லெஸ் டயாப்லரட்ஸில் நேற்று முன்தினம் புயல்காற்று 100 கி.மீ வேகத்தில் வீசியது.
தலைநகரான பெர்னில் 12 செ.மீ பனி படர்ந்தது. இது போன்ற பனி 1931ம் ஆண்டிற்குப் பின்பு நடந்திருக்கும் ஒரு நிகழ்வாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சாலை விபத்து உதவிக் கழகமான டூரிங் கிளப் சுவிஸ்ஸிடம் இதுவரை 2500 பேர் தொலைபேசியில் உதவி கேட்டுள்ளனர்.
கடந்த சனி மற்றும் ஞாயிறு இரவுகளில் பெர்ன் மாநிலத்தில் மட்டும் அறுபதுக்கும் அதிகமான விபத்துகள் நடந்துள்ளன.
சூரிச்சில் 12 விபத்துகள் நடந்தன. இவையனைத்தும் வாகனங்கள் திருப்பங்களில் பனி சறுக்கி முட்டி மோதியவை தான். எனவே எவருக்கும் மோசமான ரத்தக் காயம் இல்லை.
A12 நெடுஞ்சாலையில் ஃபிரிபோக் மாநிலத்தில் சேட்டல்- தூய டெனிசுக்கும் வால்ரசுக்கும் இடையான பகுதியில் எட்டு வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி ஒரே இடத்தில் குவிந்து விட்டன.
ஒருவர் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இதனால் ஞாயிறு பிற்பகல் ஃபிரிபோர்கில் மோரத் அருகே பாதுகாப்பு கருதி பல சிறிய சாலைகளில் போக்குவரத்தை தடை செய்துவிட்டனர்.
மேலும் 60 செ.மீ உயரத்திற்குப் பனி வீழ்ந்ததால் மலைகளுக்கு இடையே போகும் கேபிள்- கார் நிறுத்தப்பட்டது.
தனியார் மற்றும் அரசு ரயில்வே நிறுவனங்கள் சில ரயில் சேவைகளை நிறுத்தி விட்டன.
இதற்கிடையே சுவிஸ் கால்பந்தாட்டக் கழகம் தனது போட்டிகளை ஒத்தி வைத்துள்ளது.
|
Comments
Post a Comment