குர்பான் கடமையை நிறைவேற்ற தடைகள் இருக்காது
இந்த முறை குர்பான் கடமையை நிறைவேற்ற தடைகள் ஏற்படுத்தப்படும் என்ற அச்ச உணர்வு தொடர்பாக கருத்துரைத்துள்ள அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் துணைச் செயலாளர் தாஸீம் மௌலவி, இந்த முறையும் கடந்த முறைகள் போன்று குர்பான் கடமையை நிறைவேற்ற தடைகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் .
அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, பாதுகாப்பு செயலாளருடன் இது தொடர்பாக பேசியுள்ளார். குர்பானுக்கு பாதகம் ஏற்படாதவிதமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் சுற்று நிரூபம் ஒன்றை வெளியிடலாம் என்றும் தாஸீம் மௌலவி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment