வங்காள விரிகுடாவில் தோன்றிய புயலுக்கு பெயர் “நீலம்”: பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம்
வங்காள விரிகுடாவில் தோன்றிய புயல் சின்னத்துக்கு “நீலம்” என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் பெயர் சூட்டியுள்ளது.
தமிழகத்துக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் இடையிலான பகுதியில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக உருவாகியுள்ளது.
இந்த புயலுக்கு நீலம் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் பெயரிட்டுள்ளது. இந்த நீலம் புயல், நாளை இரவு, நாகபட்டினம் - நெல்லூர் இடையே கரையை கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும், கடலோரே மாவட்டங்களில் இந்த புயலினால் அதிக பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரையோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பலத்த மழை பெய்யக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் சின்னம் சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவிலும், இலங்கையிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவு கடலில் நிலை கொண்டிருப்பதால், அடுத்த 48 மணி நேரத்துக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments
Post a Comment