திருகோணமலை மாவட்டத்திலேயே அதிக மழைவீழ்ச்சி! வானியல் நிபுணர் தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, 09:11.40 AM GMT ]
இலங்கைத் தீவின் கிழக்கு பகுதியில் காணப்பட்ட புயல் சின்னம் வலு குறைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் கடந்த இருநாட்களாக பெய்து வரும் அடைமழையினால் திருகோண்மலை மாவட்டத்திலேயே அதிக மழை பெய்துள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விபரங்களுடன் திணைக்களத்தின் கடமைநேர வானியல் நிபுணர் லக்ஷ்மி லப்தீப் தெரிவித்துள்ளதாவது:
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் மழை காரணமாக தாழ்ந்த பககுதிகளில் வெள்ள அபாயம் ஏற்ப்பட்டுள்ளதுடன், பலவீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்து மீள்குடிNறிய வெல்லாவெளி கொக்கட்டிச்சோலை உட்பட பல பகுதிகள் மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மட்டக்களப்பில் 127.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதேவேளை, வவுனியாவில் 88.2 மில்லிமீற்றர் மழையும், கண்டியில் 59.4 மில்லிமீற்றர் மழையும், கொழும்பில் 86.3 மில்லிமீற்றர் மழையும் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் 182.5 மில்லிமீற்றருமாக, பொலன்னறுவ 104.1 மில்லிமீற்றருமாக மழை பெய்துள்ளது.
இதேவேளை, நுவரெலியாவில் 85.8 மில்லிமீற்றர்,
களுத்துறையில் 115 மில்லிமீற்றர்,
நீர்தேக்கங்களை அண்டிய மலையக பகுதிகளாக நோட்டன்பிரிஜ்ஜில் 82.3 மில்லிமீற்றரும்,
கொத்மலையில் 70 மில்லிமீற்றரும்,
மவுசாக்கலையில் 61 மில்லிமீற்றர் மழையும் பெய்துள்ளது.
இதனிடையே, யாழ்ப்பாணத்தில் 51.4 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது.

Comments

Popular posts from this blog

iOS 7 vs iOS 6 – Side By Side Visual Comparison [IMAGES]

''டாடா''வின் பைசா செலவில்லாமல் காற்று எரிபொருளில் இயங்கும் கார்!

Top 3 Services For Jailbreaking iPhone 5, 5c, 5s