கனடாவின் பல பகுதிகளிலும் சான்டி புயல்: மக்கள் தவிப்பு
கனடாவின் தெற்கு கியூபெக்கிலும், ஒண்டோரியாவிலும் நேற்று மாலை முதல் சான்டி புயல் வீச தொடங்கியது.
இப்புயல் வேகமாக நகர்ந்து நோவா ஸ்கோட்டியா மற்றும் நியூ புரூன்ஸ்விக் பகுதிகளில் கனமழை பெய்ய கூடும்.
டொரண்டோவில் நேற்றிரவு பலத்த சூறாவளி காற்று வீசியதில், தெருவில் சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது விளம்பர பலகை விழுந்தது. இதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் பலத்த சூறாவளி காற்றும், கனமழையும் பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
ஒண்டோரியா
தெற்கு ஒண்டோரியாவில் 20 முதல் 40 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும் என்றும், அப்போது காற்று 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்றும் கனடா சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.
கியூபெக்
கியூபெக்கின் ஒரு சில இடங்களில் 40 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும் என்றும், மழைநீர் பனிக்கட்டியாக உறையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதி
தென்மேற்கு கடலோரப் பகுதிகளில் நாளை முதல் 50 மில்லி மீற்றர் வரை கனமழை பெய்ய தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கடற்கரை பகுதியில் கடல் அலைகள் வேகமாக எழும்பி, கடல் நீர் ஊருக்குள் புகுந்து விடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
Comments
Post a Comment