காலநிலை மாற்றத்தினால் யாழ்.குடாநாட்டு கடற்றொழிலாளர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, 10:30.09 AM GMT ]
வடக்கு மற்றும் கிழக்கில் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் காரணமாக கடற்றொழிலாளர்கள் தொழிலிற்குச் செல்லாது பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ் மாவட்டத்தின் கடற்கரையோர பகுதி எங்கும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதையடுத்து கடற்றொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லாது வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பதாகவும், அத்துடன் அவர்களின் மீன்பிடிப் படகுகள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவதாகவும் தொடர்ந்து இதே காலநிலை தொடருமாக இருந்தால் தாம் பொரும் பொருளாதார பிரச்சனையினை எதிர்நோக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக வடமாராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்பரப்புப் பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பாகக் காணப்படுவதாகவும் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment