Posts

Showing posts from October, 2012

கனடாவின் பல பகுதிகளிலும் சான்டி புயல்: மக்கள் தவிப்பு

Image
ராட்சத புயலான சான்டியால் கனடாவில் பல இடங்களில் புயல் வீச தொடங்கியுள்ளது. கனடாவின் தெற்கு கியூபெக்கிலும், ஒண்டோரியாவிலும் நேற்று மாலை முதல் சான்டி புயல் வீச தொடங்கியது. இப்புயல் வேகமாக நகர்ந்து நோவா ஸ்கோட்டியா மற்றும் நியூ புரூன்ஸ்விக் பகுதிகளில் கனமழை பெய்ய கூடும். டொரண்டோவில் நேற்றிரவு பலத்த சூறாவளி காற்று வீசியதில், தெருவில் சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது விளம்பர பலகை விழுந்தது. இதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பலத்த சூறாவளி காற்றும், கனமழையும் பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். ஒண்டோரியா தெற்கு ஒண்டோரியாவில் 20 முதல் 40 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும் என்றும், அப்போது காற்று 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என்றும் கனடா சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. கியூபெக் கியூபெக்கின் ஒரு சில இடங்களில் 40 மில்லி மீற்றர் வரை மழை பெய்யும் என்றும், மழைநீர் பனிக்கட்டியாக உறையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதி தென்மேற்கு கடலோரப் பகுதிகளில் நாளை முதல் 50 மில்லி மீற்றர் வரை...

சுவிஸில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Image
சுவிட்சர்லாந்தில் பனிக்காலம் முன்னதாகவே வந்துவிட்டதால் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளின் சாலைகளில் பனி 3 செ.மீ முதல் 40 செ.மீ வரை படர்ந்துள்ளது. வாட் மாநிலத்தில் உள்ள மலைக்கிராமமான லெஸ் டயாப்லரட்ஸில் நேற்று முன்தினம் புயல்காற்று 100 கி.மீ வேகத்தில் வீசியது. தலைநகரான பெர்னில் 12 செ.மீ பனி படர்ந்தது. இது போன்ற பனி 1931ம் ஆண்டிற்குப் பின்பு நடந்திருக்கும் ஒரு நிகழ்வாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. சாலை விபத்து உதவிக் கழகமான டூரிங் கிளப் சுவிஸ்ஸிடம் இதுவரை 2500 பேர் தொலைபேசியில் உதவி கேட்டுள்ளனர். கடந்த சனி மற்றும் ஞாயிறு இரவுகளில் பெர்ன் மாநிலத்தில் மட்டும் அறுபதுக்கும் அதிகமான விபத்துகள் நடந்துள்ளன. சூரிச்சில் 12 விபத்துகள் நடந்தன. இவையனைத்தும் வாகனங்கள் திருப்பங்களில் பனி சறுக்கி முட்டி மோதியவை தான். எனவே எவருக்கும் மோசமான ரத்தக் காயம் இல்லை. A12 நெடுஞ்சாலையில் ஃபிரிபோக் மாநிலத்தில் சேட்டல்- தூய டெனிசுக்கும் வால்ரசுக்கும் இடையான பகுதியில் எட்டு வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி ஒரே இடத்தில் குவிந்து விட்டன. ஒருவர் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இத...
Image
இலங்கையை நோக்கி வந்த சூறாவளி இந்தியாவை நோக்கி நகர்வு இலங்கையை நோக்கி வந்த சூறாவளி காரணமாக வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையை நோக்கிவந்த சூறாவளி அயல் நாடான இந்தியாவை நோக்கி தற்போது நகர ஆரம்பித்துள்ளதன் காரணமாகவே வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Image
வங்காள விரிகுடாவில் தோன்றிய புயலுக்கு பெயர் “நீலம்”: பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடாவில் தோன்றிய புயல் சின்னத்துக்கு “நீலம்” என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் பெயர் சூட்டியுள்ளது. தமிழகத்துக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் இடையிலான பகுதியில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு நீலம் என்று பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் பெயரிட்டுள்ளது. இந்த நீலம் புயல், நாளை இரவு, நாகபட்டினம் - நெல்லூர் இடையே கரையை கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும், கடலோரே மாவட்டங்களில் இந்த புயலினால் அதிக பாதிப்பு ஏற்படக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகம் மற்றும் ஆந்திர கடற்கரையோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் பலத்த மழை பெய்யக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் சின்னம் சென்னையில் இருந்து 500 கி.மீ. தொலைவிலும், இலங்கையிலிருந்து 100 கிலோமீற்றர் தொ...
Image
காலநிலை மாற்றத்தினால் யாழ்.குடாநாட்டு கடற்றொழிலாளர் இயல்பு வாழ்க்கை பாதிப்பு [ செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, 10:30.09 AM GMT ] வடக்கு மற்றும் கிழக்கில் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கம் காரணமாக கடற்றொழிலாளர்கள் தொழிலிற்குச் செல்லாது பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ் மாவட்டத்தின் கடற்கரையோர பகுதி எங்கும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதையடுத்து கடற்றொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லாது வீடுகளிலேயே முடங்கிக் கிடப்பதாகவும், அத்துடன் அவர்களின் மீன்பிடிப் படகுகள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவதாகவும் தொடர்ந்து இதே காலநிலை தொடருமாக இருந்தால் தாம் பொரும் பொருளாதார பிரச்சனையினை எதிர்நோக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக வடமாராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்பரப்புப் பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பாகக் காணப்படுவதாகவும் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Image
திருகோணமலை மாவட்டத்திலேயே அதிக மழைவீழ்ச்சி! வானியல் நிபுணர் தகவல் [ செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, 09:11.40 AM GMT ] இலங்கைத் தீவின் கிழக்கு பகுதியில் காணப்பட்ட புயல் சின்னம் வலு குறைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் கடந்த இருநாட்களாக பெய்து வரும் அடைமழையினால் திருகோண்மலை மாவட்டத்திலேயே அதிக மழை பெய்துள்ளதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான விபரங்களுடன் திணைக்களத்தின் கடமைநேர வானியல் நிபுணர் லக்ஷ்மி லப்தீப் தெரிவித்துள்ளதாவது: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடும் மழை காரணமாக தாழ்ந்த பககுதிகளில் வெள்ள அபாயம் ஏற்ப்பட்டுள்ளதுடன், பலவீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து மீள்குடிNறிய வெல்லாவெளி கொக்கட்டிச்சோலை உட்பட பல பகுதிகள் மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மட்டக்களப...
Image
அதிசய ஆட்டை 128,000 யூரோவுக்கு விற்பனை செய்த ராஜஸ்தானியர் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் 37 வயதான இஸ்லாம் பாட்டி என்பவர் தான் வளர்த்த ஆட்டை 128,000 யூரோவுக்கு விற்பனை செய்துள்ளார். இவரது அரவணைப்பில் வளர்ந்துவந்த 2 வயதான இந்த ஆட்டுக்குட்டி, தற்போது உலகப்பிரபல்யம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அதன் உடலில் அரேபிய மொழியில் அல்லாவின் நாமத்தைக்கொண்டிருப்பதே ஆகும். இதன் காரணமாக இந்த ஆட்டுக்குட்டியானது ஈத் அல் அட்ஹா எனப்படும் பக்ரித் விழாவை முன்னிட்டு 128,000 யூரோ பெறுமதிக்கு விற்கப்பட்டுள்ளது.
Image
May Allah's Blessing light your way... Strengthen ur faith... And bring joy 2 ur hearts as you praise and serve him today, tomorrow and always... HAPPY EID EID UL ALHA or MUBARAK to All lovely ma Muslim Friends

நிந்தவூர் கடற்கரையில் மீண்டும் பாரிய திருக்கை மீன் பிடிபட்டுள்ளது.

Image
இன்று மாலை 3.30 மணியளவில் நிந்தவூர் 5ம் குறிச்சி கடற்கரையில் மீனவர்களின் வலையில் இந்த மீன் சிக்கியுள்ளது.முன்னர் பிடிபட்ட மீனிலும் பார்க்க சற்று சிறிதாக காணப்படுகின்ற இந்த திருக்கை மீனானது சுமார் 70000 ரூபாவிற்கு சாய்ந்தமருது மீனவருக்கு விற்கப்பட்டுள்ளது.

கிழக்கிற்கு பெருமை தேடித் தந்த நிந்தவூர் அல்மதீனா மாணவன் ஆஷிக் கௌரவிக்கப்படுகிறார்!

Image
2012 ஆண்டு அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் நிந்தவூர் அல் மதீனா மகா வித்தியாலயத்தில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் செல்வன்.இசட்.ரி.எம்.ஆஷிக் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பரிது வட்டம் வீசுதல் நிகழ்ச்சியில் தங்கப்பதக்கமும் குண்டு போடுதல் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கமும் பெற்று கிழக்கு மண்ணிற்கு பெருமை தேடிக்கொடுத்த ஒரே ஒரு வீரராகின்றார்மாத்தறை ராஜபக்ச மைதானத்தில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டியில் பரிது வட்டம் வீசுதலில் 37.73 மீற்றர் தூரம் ஏறிந்து தங்கப் பதக்கத்தினையும் குண்டு போடுதலில் 11 .85 மீற்றர் தூரம் ஏறிந்து வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தார். இதனை விடுத்து 2012ம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண பாடசாலை விளையாடு விழாவிலும் இளைஞர் கழக விளையாட்டு விழாவிலும் ஆஷிக் ஈட்டி எறிதல், பரிது வட்டம் வீசுதல் மற்றும் குண்டு போடுதல் நிகழ்சிகளில் கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தார். இதேவேளை தான் கல்வி கற்கும் நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயதிற்கும் கிழக்கு மாகானதிற்கும் பெருமை தேடிக்கொடுத்ததுடன் மிக இள வயதில் அதிக திறமைகளை வெளிக்க...

கடல் அலையை பயன்படுத்தி மின் உற்பத்தி – சம்மாந்துறை முஸ்லிம் இளைஞன் சாதனை

Image
எமது நாட்டில் மட்டுமல்லாது முழு உலகமுமே இலத்திரணியல் மயமான இக் காலகட்டத்தில் மின் பாவனையாளர்களின் அன்றாடத் தேவை மிகவும் மிகைத்துள்ள நிலையில் இதன் உற்பத்தியிலே மிகவும் தேவை அதிகமாகக் காணப்படுகின்றது. இவற்றை நிபர்த்தி செய்யும் வகையில் பல முயற்சிகள் காணப்பட்டபொழுதிலும் பல்வேறுபட்ட இயற்கை செயற்கைச் சவால்களை எதிர்நோக்கிக்கொண்டிரு க்கிறோம். அந்தவகையில் இன்று இலங்கையைப் பொறுத்தவகையில் நீர்மின் உற்பத்தி அதிகளவில் காணப்பட்டபொழுதிலும் அதிகவறட்சி காரணமாக மின்உற்பத்தி மிகவும் குறைவடைந்த நிலையில் மாற்றுவழிகளில் இதனை நிவர்த்தி செய்யும்பொருட்டு சில உற்பத்திகள் மேற்கொண்டபொழுதிலும் அதிலும் பல சிக்கல்கள் நிகள்வதுடன் போதியளவு உற்பத்திகளும் கிடைப்பதில்லை. அதிலும் இன்று அனல்மின் உற்பத்தியைப் பொறுத்தவகையில் பாரிய முதலீட்டுடன் மக்கள் தேவையை உணர்ந்து நிர்மாணித்தபொழுதிலும் அதனால் சூழல் வழிமண்டலப் பாதிப்புகழுடன் உற்பத்திச் செலவும் அதிகளவிலேயே காணப்படுகின்றன. இந்த இக்கட்டான நிலைக்கு பாவனையாளர்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில் புதிய ஒரு முறையை ஒருவர் மிக நீண்டகாலமாக தனக்குள்ளே வைத்திருந்துள்ளார் இவரை தாங்கள் இப்போதுதா...

குர்பான் கடமையை நிறைவேற்ற தடைகள் இருக்காது

Image
இந்த முறை குர்பான் கடமையை நிறைவேற்ற தடைகள் ஏற்படுத்தப்படும் என்ற அச்ச உணர்வு தொடர்பாக கருத்துரைத்துள்ள அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் துணைச் செயலாளர் தாஸீம் மௌலவி, இந்த முறையும் கடந்த முறைகள் போன்று குர்பான் கடமையை நிறைவேற்ற தடைகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் . அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, பாதுகாப்பு செயலாளருடன் இது தொடர்பாக பேசியுள்ளார். குர்பானுக்கு பாதகம் ஏற்படாதவிதமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் சுற்று நிரூபம் ஒன்றை வெளியிடலாம் என்றும் தாஸீம் மௌலவி தெரிவித்துள்ளார்.