Posts

Showing posts from 2012

டெங்குவுக்கு சூப்பர் மருந்து பப்பாளி இலைகள்!

Image
டெங்குவுக்கு சூப்பர் மருந்து பப்பாளி இலைகள்! தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொதுவாக இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த நோய் வந்தால், கடுமையான காய்ச்சலுடன், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைவதோடு, தசை வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். சிலசமயங்களில்  இந்த நோயால் மரணம் கூட ஏற்டும் வாய்ப்பு உள்ளது.  இத்தகைய நோய்க்கு இதுவரை எந்த ஒரு சிறப்பான மருத்துவமும் இல்லை. பப்பாளி இலைகள் இதற்கு தீர்வாக அமைகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. ஆனால் தற்போது பப்பாளி இலைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது. ஏனெனில்  பப்பாளி இலையின் சாறு, உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் அந்த ஆய்வை வன இந்திய மேலாண்மை கல்லி நிறுவனம், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து பேரைக் கொண்டு சோதனையை நடத்தியது. இதில் அவர்களுக்கு பப்பாளி இலையின் சாறு கொடுக்கப்பட்டது. இதனால் பப்பாளி இலையின் சாற்றில் உள்ள சத்துக்கள், அவர்களுக்கு இருந்த  டெங்கு காய்ச்சலை முற...

தாயத்தைத் தொங்க விட்டவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டான்

Image
தாயத்தைத் தொங்க விட்டவன்  அல்லாஹ்வுக்கு  இணை வைத்துவிட்டான்! கிரக பலன்களையும் ராசி பலன்களையும் நம்புவது நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள், நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் எற்படுகின்றன என நம்புவதும் குஃப்ராகும். ஜைது இப்னு காலித் அல்ஜுஹனி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு முறை நபி அவர்கள் ஹுதைபிய்யாவில் சுப்ஹு தொழுகையை தொழ வைத்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுகை முடிந்தவுடன் மக்களை முன்னோக்கி, "உங்களது இறைவன் என்ன கூறினான் என்பதை அறிவீர்களா?' என்று வினவினார்கள். "அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்' என நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபி அவர்கள் கூறினார்கள்:

அல் ஹதீஸ் - தும்மினால்....

  தும்மினால்....  அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: நிச்சயமாக அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் ஒருவர் தும்மி, ''அல்ஹம்துலில்லாஹ்'' கூறினால், அதைக் கேட்ட அனைத்து முஸ்லிமின் மீதும் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ்'' (அல்லாஹ் உனக்கு அருள் புரிவான்) என்று கூறுவது கடமையாக உள்ளது. கொட்டாவி விடுதல் என்பது, ஷைத்தானின் செயல்களில் உள்ளதாகும். உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அதை முடிந்த அளவுக்கு தடுத்துக் கொள்ளட்டும். உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அவரைக் கண்டு ஷைத்தான் சிரிக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரி)

குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள்

  குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள்  ''உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களையும் (குர்ஆன்) ஞானங்களையும் (ஹிக்ம்) நினைவில் வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவுடையோனும் (யாவையும்) நன்கறிந்தோனுமாக இருக்கின்றான்.''  (அல்குர்ஆன் 33:34) மேற்கண்ட இறை வசனத்தில் ‘கிதாப்’ என்ற குர்ஆனைக் குறிக்க இறைவன் கூறிய சொல்லோடு இணைத்து ‘ஹிக்ம்’ என்ற சொல் ஸுன்னாவையே குறிக்கும் என்று எல்லா அறிஞர்களின் முடிவாகும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் பொதிந்துள்ள குர்ஆனை அல்லாஹ் ஒரே நேரத்தில் அருளவில்லை. அதை ஓதிக் காண்பித்து அதன் வசனங்களை மக்களுக்கு விளக்கிக் காட்ட ஒரு தூதர் மூலமாகவே அருளப்பட்டது. குர்ஆனின் கருத்துக்கள் அந்த இறைத்தூதரின் வாழ்விலும், செயலிலும் நடைமுறைப் படுத்தப்பட்டன.

"இறைவா! என் முகத்தை நரகத்தைவிட்டும் திருப்புவாயாக!"

  "இறைவா! என் முகத்தை நரகத்தைவிட்டும் திருப்புவாயாக!"  புகாரி ஹதீஸ் 806. அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், 'மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! இல்லை' என்றார்கள். மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்' என்று கூறினார்கள்.

''டாடா''வின் பைசா செலவில்லாமல் காற்று எரிபொருளில் இயங்கும் கார்!

Image
'டாடா''வின் பைசா செலவில்லாமல் காற்று எரிபொருளில் இயங்கும் கார்! நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற வகையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை வடிவமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எலக்ட்ரிக் தவிர்த்து மாற்று எரிபொருள் கார்களை உருவாக்கும் வகையில், கடந்த 2007ம் ஆண்டு ஐரோப்பிய நிறுவனமான எம்டிஐ நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டன. 2 கட்டமாக புதிய காரை வடிவமைக்க திட்டமிடப்பட்டது.

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்

Image
கணினியின்  வேகத்தை  அதிகரிக்க   10 வழிகள் 1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும்.ஒரு சாதாரண கணினிக்கு 1 GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM-ன் விலை மிகவும் மலிவுதான். 2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும்.  மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.  பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும்  CD / DVD  ல் ஏற்றி  burn செய்துகொள்ளவும். 3.  FireFox, Chrome, IE  என ஒன்றுக்கு மேற்பட்ட  browsers-ஐ  நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும். 4.  G-Talk, Yahoo Messenger, Live Messenger  என ஒன்றுக்கு...

பொலநறுவையில் பெய்த சிவப்பு மழை - பதற்றத்தில் சிங்கள மக்கள்

Image
  பொலன்நறுவை மாவட்டத்தில் மனம்பிட்டிய பிரதேசத்தில் இன்று காலை 8:00 மணியளவில் சிவப்பு மழை பெய்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சிவப்பு மழை தொடர்ந்து ஒரு மணிநேரத்திற்கு பெய்துள்ளது. இந்நிலையில் நேற்று மொனராகல மாவட்டத்தில் செவனகல பிரதேசத்தில், இந்திகொலபெலஸ்ஸ பகுதியிலும் சிவப்பு மழை பெய்ததாக அக்கிராமத்து மக்கள் தெரிவித்தனர். நேற்றும், இன்றும் இவ்வாறு சிவப்பு மழை பெய்ததால் குறிப்பிட்ட கிராமத்து மக்கள் பீதியடைந்து ஏன் இவ்வாறு சிவப்பு மழை பெய்கின்றது என ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து இதனால் கிராமத்திற்கு ஏதாவது அழிவு ஏற்படுமா என அச்சமடைந்துள்ளனர். இவ் அச்சம் தற்போது குறிப்பிட்ட இரு மாவட்ட மக்களுக்கும் பரவியுள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சில வருடங்களுக்கு முன் இந்தியா கேரளாப் பகுதியிலும் இவ்வாறு சிவப்பு மழை பெய்ததாக அறியமுடிகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் இலங்கை காலநிலை அவதான நிலைய பணிப்பாளர் எஸ்.ஆர் ஜெயசேகர கருத்து தெரிவிக்கையில்,  சாதாரணமாக மீன்மழை ஏற்படுவதைப் போல, மேகத்துக்கு நீர் உறிஞ்சப்படும் போது, சில நிற திரவியங்களும் க...

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இதுதான் போல!...

Image

செயற்கை காலுடன் 103 மாடிகள் ஏறி சாதனை படைத்த மனிதர்

Image
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள 103 மாடி கட்டடமான வில்லிஸ் டவரில் ஞாயிற்றுக்கிழமை "பயோனிக்' செயற்கைக் கால் உதவியுடன் ஏறி சாதனை படைத்த சாக் வாவ்டர். இவ்வகையான செயற்கைக் கால்கள், பொருத்தப்பட்டுள்ளவரின் சிந்தனைக்கு ஏற்ப செயல்படும். இவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் தனது வலது காலை இழந்தார். சிகாகோ மறுவாழ்வு நிறுவன ஆய்வாளர்கள் இந்த செயற்கைக்காலினைப் பொருத்தினர்.

நாளைய உலகத்தின் அசத்தலான தொழில்நுட்பம்

Image

ஆராய்ச்சியா​ளர்களையே அசர வைத்த கிளி

Image
கொக்காற்றோ (Cockatoo) எனும் வகையைச் சார்ந்த கிளி ஒன்று தனக்காக சற்று தொலைவில் வைக்கப்பட்டிருந்த உணவை எடுப்பதற்காக குச்சி ஒன்றினை ஒடித்து அதனை பயன்படுத்தியுள்ளது. ஐந்தறிவு ஜீவனான இந்தக் கிளியின் இச்செயற்பாடானது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆரய்ச்சியாளர்களையே வியக்க வைத்துள்ளதாம்.

நாம் வாழும் பூமியில் இத்தனை அதிசயங்கள் நிறைந்துள்ளதா?

Image
Andrey Ermolaev எனும் ரஷ்ய புகைப்படவியளாளர் சிறிய ரக விமானம் ஒன்றின் மூலம் சுமார் 4,300 மைல்கள் பயணம் செய்து தனது கமெராவுக்குள் சிறையெடுத்த பல்வேறு புகைப்படங்களையே இங்கு காண்கின்றீர்கள். ஏரிகள், ஓடைகள் என கலைநயம் நிறைந்திருந்த இடங்களையெல்லாம் 56 வயதான இந்த நபர் தரையிலிருந்து 80 தொடக்கம் 150 மீட்டர்கள் உயரத்தில் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்தவாறே புகைப்படம் எடுத்துள்ளார்.

அழகு பொருளாகவும் பயன்படும் எலுமிச்சை

Image
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை நிறைய மருத்துவ குணம் நிரம்பியது. அதிலும் அந்த எலுமிச்சை உடல் நலத்திற்கு மட்டும் நன்மையை தருவதோடு, அழகுப் பொருட்களிலும் ஒன்றாக பயன்படுகிறது. எப்படியெனில் இதில் அதிகப்படியான வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து, முகத்தை கழுவினால் சருமத்துளைகளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சற்றை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவிட வேண்டும். இதனை ஒரு நாள் விட்டு தொடர்ந்து செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கிவிடும். எலுமிச்சையை வைத்து ஃபேஷியல் கூட செய்யலாம். அதற்கு ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றுடன், 1/4 கப் ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் எண்ணெயை சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஃபேஷியல் செய்தால், சருமம் பொலிவாவதோடு, ஈரப்பசையுடனும் இருக்கும். தலையில் பொடுகு இருந்தால் தினமும் ஸ்கால்ப்பில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு, மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் தலையை அலசி, மறுபடியும் ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் எலு...

Skype-ன் மூலம் பரவும் புத்தம் புதிய வைரஸ்

Image
கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை பரப்பி விடும் Hackers, தற்போது Skype Program-ன் புதிய வசதி மூலம் வைரசை பரப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. Skype-ன் Message-ல் "lol is this your new profile pic?" என்ற செய்தி வந்து, அதனை நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் வைரஸ் உங்கள் கணனிக்குள் புகுந்து விடுகிறது. இதன் மூலம் Hackers, குறித்த கணனியை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். இது குறித்து ஆய்வாளர்கள், தாங்கள் இந்த வைரசின் தாக்கம் குறித்து அறிந்திருப்பதாகவும், விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் சமீபத்தில் வெளியான புதிய Skype பதிப்பை பயன்படுத்துமாறும் பயனாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Samsung அறிமுகப்படு​த்தும் Galaxy Premier கைப்பேசிகள்

Image
முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Samsung ஆனது தனது உருவாக்கத்தில் வெளியாகி பிரபலமடைந்து Galaxy S III கைப்பேசியின் உருவத்தை ஒத்த வடிவமைப்பினைக் கொண்ட Galaxy Premier கைப்பேசிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. இக்கைப்பேசிகள் 4.65 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixels Resolution உடைய Super AMOLED தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் TI OMAP 4470 வகையைச் சார்ந்த 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடிய Processor-னையும் கொண்டுள்ளது. மேலும் இவை Android 4.1 Gelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 1GB RAM காணப்படுகின்றது. இவற்றுடன் 8 Mexapixels உடைய பிரதான கமெராவும், வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்காக 1.9 Mexapixels உடைய துணைக்கமெரா ஒன்றும் பொருத்துப்பட்டுள்ளது. அத்துடன் இவற்றின் பெறுமதியானது 680 அமெரிக்க டொலர்களாகும்.

பலத்த எதிர்பார்ப்​புக்களுக்கு மத்தியில் அறிமுகமாகி​யது iPad mini

Image
கணனி உலகில் புரட்சியை ஏற்படுத்திய அப்பிள் நிறுவனமானது தனது iPad உற்பத்தியில் iPad mini எனும் நான்காம் சந்ததி Tablet - இனை பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னைய iPad சாதனங்களை விடவும் பருமனில் சிறியதாக காணப்படும் இவற்றின் அகலமானது 5.3 அங்குலங்களாகவும், நீளமானது 7.87 அங்குலங்களாகவும் காணப்படுகின்றது. மேலும் இவற்றின் தடிப்பானது 7.2 மில்லி மீட்டர்காளகவும் அமைந்துள்ளது. அப்பிள் இறுதியாக அறிமுகப்படுத்திய iOS 6 இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த iPad mini, 768 x 1024 Pixels Resolution உடையதும் 7.9 அங்குல அளவுடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளன. இவை தவிர 2G, 3G மற்றும் 4G வலையமைப்பு தொழில்நுட்பங்களில் செயற்படவல்லவை. மேலும் Dual-core 1 GHz Cortex-A9 Processor, 512 MB RAM, 5 Mexapixels உடைய பிரதான கமெரா மற்றும் 1.2 Mexapixels கொண்ட துணைக் கமெரா ஆகியவற்றினையும் கொண்டுள்ளன. 16GB, 32GB மற்றும் 64GB ஆகிய சேமிப்பு கொள்ளளவுகளைக் கொண்டதாகக் கிடைக்கும் இவற்றின் பெறுமதியானது முறையே 269, 349, 429 அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட...

VLC Media Playerன் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்வதற்கு

Image
VLC Media Player ஆனது ஏனைய மென்பொருட்களை விடவும் பல வைகையான வீடியோ போர்மட்களை இயக்கக்கூடியவாறு காணப்படுவதுடன் மேலும் பல சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்றது. இதனால் அதிகளவான மக்கள் VLC Media Player-ஐ பயன்படுத்துகின்றனர். எனினும் இதன் முன்னைய பதிப்புக்களில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாகவும், மேலும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் முகமாகவும் தற்போது VLC Media Player - இன் புத்தம் புதிய பதிப்பான VLC 2.0.4 தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய பதிப்பின் மூலம் Blu-Ray, DVD, HLS, Ogg மற்றும் MKV போன்ற கோப்புக்களையும் இயக்கக்கூடியவாறு காணப்படுவதுடன் Youtube, Vimeo, Koreus, Soundcloud போன்ற தளங்களில் உள்ள வீடியோ மற்றும் ஓடியோ கோப்புக்களையும் இயக்கும் வசதிகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தரவிறக்க சுட்டி

மின் இதழ்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய

Image
கணனி துறை சம்பந்தமான மின் இதழ்கள் பல உள்ளன, அவற்றில் பலவும் விலை அதிகமானவை. இதுபோன்ற அனைத்து இதழ்களையும் நம்மால் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த முடியாது. இந்நிலையில் சில நிபந்தனைகளுடன் இலவசமாக தரவிறக்கம் செய்ய இணையத்தளங்கள் உள்ளன. அவைகள், PDF giant இந்த தளத்திலிருந்து ஆங்கிலம், ப்ரென்ஞ், இத்தாலி, ஜேர்மன் போன்ற மின் இதழ்களையும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த தளத்தில் பயனர் வசதிகேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்தி பயனர்கள் இலவசமாக மின் புத்தகங்களை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். PDF giant Magazine Time சமீபத்தில் வெளியான மின் புத்தகங்களை தரவிறக்கம் செய்ய உதவுகிறது. Magazine Time WorldMags கணனி மின்புத்தகங்கள் மட்டுமல்லாது, மற்ற மின் புத்தகங்களையும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். WorldMags

விரைவில் அறிமுகமாகும் பேஸ்புக் கைப்பேசிகள்

Image
சமூக வலைத் தளங்கள் மத்தியில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டு அசைக்க முடியாத அரசனாக பேஸ்புக் திகழ்கின்றது. இத்தளமானது HTC நிறுவனத்துடன் இணைந்து தனது உற்பத்தியில் உருவாக்கப்பட்டு வரும் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருகின்றது. Opera UL எனும் பெயரைத் தாங்கி வருவுள்ள இக்கைப்பேசிகள் Android 4.1.1 Gelly Bean இயங்குதளத்தினைக் கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுவருகின்றது. தவிர இக்கைப்பேசிகள் 1280 x 720 Pixels Resolution கொண்ட HD தொடுதிரையினை உள்ளடக்கியதாகவும், 1.4GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor-னையும் கொண்டுள்ளது. மேலும் இக்கைப்பேசிகளில் Adreno 305 graphic தொழில்நுட்பமும் உள்ளடக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

iOS இயங்குதளத்​தின் புதிய பதிப்பினை வெளியிட்டது அப்பிள்

Image
அப்பிள் நிறுவனமானது தனது தயாரிப்பில் உருவாகும் கைப்பேசிகள் மற்றும் iPad போன்றவற்றிற்கு பிரத்தியேகமாக இயங்குதளத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளமை அறிந்ததே. iOS என அழைக்கப்படும் இவ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 6 - இனை அண்மையில் வெளியிட்டிருந்த நிலையில் மீண்டும் குறுகியகாலத்தில் தற்போது அதன் மற்றுமொரு பதிப்பான iOS 6.0.1 - இனை தற்போது வெளியிட்டுள்ளது. முன்னைய பதிப்புக்களில் காணப்பட்ட விசைப்பலகைக்கு செங்குத்தான காட்சித் தோற்றம், கமெரா Flash-இனை Off நிலைக்கு செல்லாது வைத்திருத்தல், போன்றவற்றுடன் Passcode Lock - இல் காணப்பட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டு சில புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இவ் இயங்குதளமானது அப்பிளின் அனைத்து விதமான கைப்பேசிகள் மற்றும் அனைத்துவிதமான iPad போன்றவற்றிலும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தரவிறக்கம் செய்ய iPad 2 WiFi -  தரவிறக்க சுட்டி iPad 2 GSM -  தரவிறக்க சுட்டி iPad 2 CDMA -  தரவிறக்க சுட்டி iPad 2 (rev B.) -  தரவிறக்க சுட்டி iPad mini WiFi -  தரவிறக்க சுட்டி iPad 3 WiFi -  தரவிறக்க சுட்டி iPad...

ஒன்றிற்கு மேற்பட்ட மின்னஞ்சல்​களுக்கு ஒரே தடவையில் பதில் அனுப்புவதற்​கு

Image
இன்று அத்தியாவசியமான தொடர்பாடல் முறைகளில் ஒன்றாகக் காணப்படும் மின்னஞ்சல் சேவைகளை பல இணையத்தள நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. எனினும் இச்சேவையின் போது பொதுவாக ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மின்னஞ்சல்களுக்கு பதில்(Reply) அனுப்புவது இதுவரை காலமும் சாத்தியமற்ற ஒரு செயற்பாடாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது மின்னஞ்சல் சேவை வழங்குனர்களில் முன்னணியில் திகழும் கூகுளின் ஜிமெயில் சேவையில் இது சாத்தியமாகியுள்ளது. இதற்காக Batch Reply for Gmail எனும் பிரத்தியேகமான கூகுள் குரோம் நீட்சி ஒன்றினை நிறுவிக்கொள்ள வேண்டும். இதனை நிறுவிய பின்னர் படத்தில் காட்டியவாறு More பொத்தானுக்கு அடுத்ததாக Reply எனும் பொத்தான் தோன்றியிருக்கும். தற்போது பதில் அனுப்பவேண்டி மின்னஞ்சல்களை தெரிவு செய்து Reply பொத்தானை அழுத்தியதும் Pop-Up விண்டோ ஒன்று தோன்றும், அதில் காணப்படும் Send பொத்தானை அழுத்தியதும் தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் குறித்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுவிடும்.