டெங்குவுக்கு சூப்பர் மருந்து பப்பாளி இலைகள்!


டெங்குவுக்கு சூப்பர் மருந்து பப்பாளி இலைகள்!
தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொதுவாக இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த நோய் வந்தால், கடுமையான காய்ச்சலுடன், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைவதோடு, தசை வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். சிலசமயங்களில் இந்த நோயால் மரணம் கூட ஏற்டும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய நோய்க்கு இதுவரை எந்த ஒரு சிறப்பான மருத்துவமும் இல்லை.
பப்பாளி இலைகள் இதற்கு தீர்வாக அமைகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. ஆனால் தற்போது பப்பாளி இலைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது. ஏனெனில் பப்பாளி இலையின் சாறு, உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறதுஎன்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிலும் அந்த ஆய்வை வன இந்திய மேலாண்மை கல்லி நிறுவனம், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து பேரைக் கொண்டு சோதனையை நடத்தியது. இதில் அவர்களுக்கு பப்பாளி இலையின் சாறு கொடுக்கப்பட்டது. இதனால் பப்பாளி இலையின் சாற்றில் உள்ள சத்துக்கள், அவர்களுக்கு இருந்த டெங்கு காய்ச்சலை முற்றிலும் சரிசெய்துவிட்டது.
எப்படியெனில் பப்பாளி இலையின் சாற்றை பருகினால், காய்ச்சல் உள்ளவர்களின் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை 24 மணிநேரத்திற்குள் போதிய அளவு அதிகரித்துள்ளது. மேலும் டெங்குவால் பாதிக்கப்படும் கல்லீரல் பிரச்சனை நீங்கி, கல்லீரல் நன்கு செயல்படும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் உள்ளன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால், உடலில் இருக்கும் நோயை தடுக்கலாம் என்றும் கூறுகிறது.
மேலும் இந்த பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.
இந்த டெங்குவுக்கு சரியான மருந்தோ தடுப்பூசியோ கிடையாது என்று உலகம் எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் - அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இயற்கை நமக்கு ஒரு அரிய பொருளை வழங்கியிருக்கிறது. டெங்குவை குணப்படுத்தும் அதிசய பொருள் இது. நம் வீட்டிலேயே இதை தயாரிக்கலாம் என்பது தான் விசேஷமே.
பப்பாளி இலையை சாறு பிழிந்து அதை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் பிளேட்லெட்ஸ் அளவை அதிகரிக்கச் செய்ய முடியும். பப்பாளி இலைச் சாற்றில் உள்ள என்சைம்கள் டெங்குவை உருவாக்கும் வைரஸ்களை மட்டும் அல்லஸ வேறு பல கொடிய வைரஸ்களையும் எதிர்த்து போரிடும் தன்மை கொண்டவை.
பப்பாளி சாற்றை உட்கொள்வதன் மூலம் பல நோயாளிகள் குணமடைந்திருக்கிறார்கள் என்று மருத்துவர்களும் உறுதிப்படுத்துகிறார்கள். பப்பாளி ஜீரணத்துக்கு மிகச் சிறந்த ஒரு பொருளென ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஒன்று. அதில் நிறைந்திருக்கும் விட்டமின்கள் மற்றும் மினரல்களால் அது உடல் நலத்துக்கு இன்றியமையாத ஒரு பழமாக உள்ளது.
பப்பாளி இலையின் சாற்றில் உள்ள ‘கைமோபாப்பின்’ மற்றும் ‘பாப்பின்’ ஆகிய இரு என்சைம்கள் தான் இரத்தத்தில் பிளேட்லெட் அளவை அதிகரிக்க உதவுகின்றன. புதிதாகக் பறிக்கப்பட்ட பப்பாளி இலையில் இருந்து தான் இந்த பப்பாளி இலைச் சாற்றை தயாரிக்கவேண்டும்.
இலையில் உள்ள நரம்புகளை தனியே உருவி அவற்றை நீக்கிய பின்பு, இலையை கூழாக அரைத்துக் கொள்ளவேண்டும். மிக்சியில் கூட போட்டு அடிக்கலாம். இதில் கிடைக்கும் பேஸ்ட் மிகவும் கசப்பாக இருக்கும். எனவே அப்படியே உட்கொள்ள முடியாது. ஆகவே ஏதாவது பழச்சாற்றில் இந்த பேஸ்ட்டை மிக்ஸ் செய்து பருகவேண்டும்.
ஒரு வேலைக்கு 20-25 ml என ஒரு நாளைக்கு இரு முறை உட்கொள்ளவேண்டும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பப்பாளி இலைச் சாற்றை உட்கொண்ட பிறகு, அவர்களின் உடல் நிலையில் கணிசமான அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.
அபிஷேக் மஜூம்தார் என்னும் 21 வயது இளைஞருக்கு, டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது அவரது இரத்தத்தில் இருந்த பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை 84,000. மருத்துவரின் ஆள்சனையின் பேரில் அவர் பப்பாளி இலைச் சாற்றை உட்கொள்ள ஆரம்பித்த பின்னர் மூன்றே நாட்களில் அவர் இரத்தத்தில் பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை 1,00,000 ஆக உயர்ந்துவிட்டது. “பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை மட்டும் கூடவில்லைஸ அவருடைய உடல் நிலையிலும் கணிசமான அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட துவங்கிவிட்டது. படிப்படியாக குணமாகிவிட்டார்” என்று கூறுகிறார் அவரது தந்தை அபிஜித் மஜூம்தார்.
32 வயது மம்தா குப்தா – மற்றுமொரு டெங்கு நோயாளி. அவருடைய பிளேட்லெட்ஸ் எண்ணிக்கையும் இதே போல, பப்பாளி சாரை உட்கொண்ட பிறகு பன்மடங்காகிவிட்டதாம். அதாவது 70,000 த்திலிருந்து 450,000 ஆக உயர்ந்து விட்டதாம்.
32 வயது மம்தா குப்தா – மற்றுமொரு டெங்கு நோயாளி. அவருடைய பிளேட்லெட்ஸ் எண்ணிக்கையும் இதே போல, பப்பாளி சாரை உட்கொண்ட பிறகு பன்மடங்காகிவிட்டதாம். அதாவது 70,000 த்திலிருந்து 450,000 ஆக உயர்ந்து விட்டதாம்.
டெங்கு முற்றிப் போய் பிளேட்லெட்ஸ்களை  கட்டாயம் TRANSFUSION செய்ய வேண்டிய நிலையில் இருப்பவர்கள், பப்பாளி சாற்றை உட்கொண்டாலே போதும். அவர்களுக்கு  TRANSFUSION தேவைப்படாது என்கிறார்கள் சில மருத்துவர்கள்.
“என்னுடைய பேஷன்ட்டுகளில் பலர் பப்பாளி இலைச் சாற்றை உட்கொண்டு பிளேட்லெட்ஸ் கவுண்ட்டை உயர்த்திக்கொண்டுவிட்டனர். ஆகவே என்னுடைய எல்லா பேஷன்ட்டுகளுக்கும் நான் அதை பரிந்துரைத்திருக்கிறேன்” என்கிறார் தொற்றுநோய் தடுப்பு மருத்துவர் தேபாஷிஷ் பாஸு.
பப்பாளி இலையில் உள்ள என்சைம்களுக்கு அபார மருத்துவ குணம் இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறார் பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணர் முகோபாத்யாய். “இயற்கையான முறையில் பப்பாளி இலைச் சாறு இதை சாதிப்பதால் ரொம்ப முற்றிய சில கேஸ்களை தவிர அனைவருக்கும் நாங்கள் இதையே பரிந்துரைக்கிறோம்” என்கிறார்.
“பப்பாளி இலை நிச்சயம் இயற்க்கை தந்த ஒரு சிறந்த ஒளஷதம் (மருந்து) என்பதில் சந்தேகம் இல்லை. இது குறித்து மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும்” என்று கூறுகிறார் பிரபல மருந்து நிபுணர் சுப்ரதா மைத்ரா.
இந்தப் பதிவை உங்கள் சுற்றத்திடமும் நட்பிடமும் பகிர்ந்து இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியாய் இருங்க. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது உதவக்கூடும்!


Comments

Popular posts from this blog

iOS 7 vs iOS 6 – Side By Side Visual Comparison [IMAGES]

''டாடா''வின் பைசா செலவில்லாமல் காற்று எரிபொருளில் இயங்கும் கார்!

Top 3 Services For Jailbreaking iPhone 5, 5c, 5s