Posts

Showing posts from December, 2012

டெங்குவுக்கு சூப்பர் மருந்து பப்பாளி இலைகள்!

Image
டெங்குவுக்கு சூப்பர் மருந்து பப்பாளி இலைகள்! தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொதுவாக இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த நோய் வந்தால், கடுமையான காய்ச்சலுடன், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைவதோடு, தசை வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். சிலசமயங்களில்  இந்த நோயால் மரணம் கூட ஏற்டும் வாய்ப்பு உள்ளது.  இத்தகைய நோய்க்கு இதுவரை எந்த ஒரு சிறப்பான மருத்துவமும் இல்லை. பப்பாளி இலைகள் இதற்கு தீர்வாக அமைகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. ஆனால் தற்போது பப்பாளி இலைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது. ஏனெனில்  பப்பாளி இலையின் சாறு, உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் அந்த ஆய்வை வன இந்திய மேலாண்மை கல்லி நிறுவனம், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து பேரைக் கொண்டு சோதனையை நடத்தியது. இதில் அவர்களுக்கு பப்பாளி இலையின் சாறு கொடுக்கப்பட்டது. இதனால் பப்பாளி இலையின் சாற்றில் உள்ள சத்துக்கள், அவர்களுக்கு இருந்த  டெங்கு காய்ச்சலை முற...

தாயத்தைத் தொங்க விட்டவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டான்

Image
தாயத்தைத் தொங்க விட்டவன்  அல்லாஹ்வுக்கு  இணை வைத்துவிட்டான்! கிரக பலன்களையும் ராசி பலன்களையும் நம்புவது நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள், நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் எற்படுகின்றன என நம்புவதும் குஃப்ராகும். ஜைது இப்னு காலித் அல்ஜுஹனி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு முறை நபி அவர்கள் ஹுதைபிய்யாவில் சுப்ஹு தொழுகையை தொழ வைத்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுகை முடிந்தவுடன் மக்களை முன்னோக்கி, "உங்களது இறைவன் என்ன கூறினான் என்பதை அறிவீர்களா?' என்று வினவினார்கள். "அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்' என நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபி அவர்கள் கூறினார்கள்:

அல் ஹதீஸ் - தும்மினால்....

  தும்மினால்....  அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: நிச்சயமாக அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் ஒருவர் தும்மி, ''அல்ஹம்துலில்லாஹ்'' கூறினால், அதைக் கேட்ட அனைத்து முஸ்லிமின் மீதும் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ்'' (அல்லாஹ் உனக்கு அருள் புரிவான்) என்று கூறுவது கடமையாக உள்ளது. கொட்டாவி விடுதல் என்பது, ஷைத்தானின் செயல்களில் உள்ளதாகும். உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அதை முடிந்த அளவுக்கு தடுத்துக் கொள்ளட்டும். உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அவரைக் கண்டு ஷைத்தான் சிரிக்கிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரி)

குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள்

  குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள்  ''உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களையும் (குர்ஆன்) ஞானங்களையும் (ஹிக்ம்) நினைவில் வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவுடையோனும் (யாவையும்) நன்கறிந்தோனுமாக இருக்கின்றான்.''  (அல்குர்ஆன் 33:34) மேற்கண்ட இறை வசனத்தில் ‘கிதாப்’ என்ற குர்ஆனைக் குறிக்க இறைவன் கூறிய சொல்லோடு இணைத்து ‘ஹிக்ம்’ என்ற சொல் ஸுன்னாவையே குறிக்கும் என்று எல்லா அறிஞர்களின் முடிவாகும். அல்லாஹ்வின் வழிகாட்டுதல் பொதிந்துள்ள குர்ஆனை அல்லாஹ் ஒரே நேரத்தில் அருளவில்லை. அதை ஓதிக் காண்பித்து அதன் வசனங்களை மக்களுக்கு விளக்கிக் காட்ட ஒரு தூதர் மூலமாகவே அருளப்பட்டது. குர்ஆனின் கருத்துக்கள் அந்த இறைத்தூதரின் வாழ்விலும், செயலிலும் நடைமுறைப் படுத்தப்பட்டன.

"இறைவா! என் முகத்தை நரகத்தைவிட்டும் திருப்புவாயாக!"

  "இறைவா! என் முகத்தை நரகத்தைவிட்டும் திருப்புவாயாக!"  புகாரி ஹதீஸ் 806. அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், 'மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! இல்லை' என்றார்கள். மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்' என்று கூறினார்கள்.

''டாடா''வின் பைசா செலவில்லாமல் காற்று எரிபொருளில் இயங்கும் கார்!

Image
'டாடா''வின் பைசா செலவில்லாமல் காற்று எரிபொருளில் இயங்கும் கார்! நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற வகையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை வடிவமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எலக்ட்ரிக் தவிர்த்து மாற்று எரிபொருள் கார்களை உருவாக்கும் வகையில், கடந்த 2007ம் ஆண்டு ஐரோப்பிய நிறுவனமான எம்டிஐ நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டன. 2 கட்டமாக புதிய காரை வடிவமைக்க திட்டமிடப்பட்டது.

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்

Image
கணினியின்  வேகத்தை  அதிகரிக்க   10 வழிகள் 1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும்.ஒரு சாதாரண கணினிக்கு 1 GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM-ன் விலை மிகவும் மலிவுதான். 2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும்.  மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.  பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும்  CD / DVD  ல் ஏற்றி  burn செய்துகொள்ளவும். 3.  FireFox, Chrome, IE  என ஒன்றுக்கு மேற்பட்ட  browsers-ஐ  நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும். 4.  G-Talk, Yahoo Messenger, Live Messenger  என ஒன்றுக்கு...