நபிகள் நாயகம் குறித்த சினிமா முத்துப்பேட்டை தர்ஹா சார்பில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்.
முத்துப்பேட்டை, செப்டம்பர் 18 : முத்துப்பேட்டையில் அமெரிக்கா நாட்டில் முஹம்மது நபியை சித்தரித்து குறும்படம் வெளியிட்ட சம்பவம் நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்ப்தி அடைந்த நிலையில் காணப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து முத்துப்பேட்டையில் உள்ள ஒவ்வொரு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவோனோடை தர்ஹா முழுவதும் கறுப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் தர்ஹாவை சுற்றி உள்ள அனைத்து வீடுகளிலும் மீதும் கறுப்புக் கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து கார், வேன், ஆட்டோ, இருசக்கர வானகம், ஆகிய வாகனங்களிலும் சிலர் கருப்பு பேஜ்களை அணிவித்து வளம் வருவதால் முத்துப்பேட்டையில் பெரும் பரப்பானது.
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு பேட்டியளித்த தர்ஹா டிரஸ்டி முதன்மை அரங்காவலர் S.S. பாக்கர் அலி சாஹிப் அவர்கள். அமெரிக்காவின் அடாவடிக்கு எல்லையே இல்லாமல் போகிவிட்டது என்றும், அண்டை நாடுகளுடன் சீண்டுவதையே தொழிலாக கொண்டிருந்த அமெரிக்கா இன்று இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வேளையில் இறங்கியது மிகவும் வேதனையான விசயமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அமெரிக்கா அரசு இது சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் மட்டுமல்லாது அந்த கொடிய செயலுக்காக உலக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த கறுப்புக் கொடி போராட்டம் தொடர்ந்து மூன்று நாளைக்கு நடைபெறும் என்றும் இதன் மூலம் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்
Comments
Post a Comment