Posts

Showing posts from September, 2012

நபிகள் நாயகம் குறித்த சினிமா முத்துப்பேட்டை தர்ஹா சார்பில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்.

முத்துப்பேட்டை, செப்டம்பர் 18 : முத்துப்பேட்டையில் அமெரிக்கா நாட்டில் முஹம்மது நபியை சித்தரித்து குறும்படம் வெளியிட்ட சம்பவம் நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்ப்தி அடைந்த நிலையில் காணப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து முத்துப்பேட்டையில் உள்ள ஒவ்வொரு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவோனோடை தர்ஹா முழுவதும் கறுப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர். மேலும் தர்ஹாவை சுற்றி உள்ள அனைத்து வீடுகளிலும் மீதும் கறுப்புக் கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து கார், வேன், ஆட்டோ, இருசக்கர வானகம், ஆகிய வாகனங்களிலும் சிலர் கருப்பு பேஜ்களை அணிவித்து வளம் வருவதால் முத்துப்பேட்டையில் பெரும் பரப்பானது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு பேட்டியளித்த தர்ஹா டிரஸ்டி முதன்மை அரங்காவலர் S.S. பாக்கர் அலி சாஹிப் அவர்கள். அமெரிக்காவின் அடாவடிக்கு எல்லையே இல்லாமல் போகிவிட்டது என்றும், அண்டை நாடுகளுடன் சீண்டுவதையே தொழிலாக கொண்டிருந்த அமெரிக்கா இன்று இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வேளையில் இறங்கியது ம...

இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

Image
இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபி (ஸல்) அவர்களையும் மோசமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் இந்த ”Innocence of Muslims” என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், எகிப்திலும் லிபியாவிலும் இந்தத் தாக்குதல் நடந்துள்ளன. இந்த நாடுகளில் ஆட்சியில் இருந்த ஹோஸ்னி முபாரக், கடாபியை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய சமூக வலைத்தளங்கள் மூலம் தான் புரட்சியை தூண்டிவிட்டது அமெரிக்கா. இந் நிலையில் இந்த வலைத்தளங்களில் இருந்தே அமெரிக்க திரைப்படத்துக்கும், தூதரகங்கள் மீதான தாக்குதலுக்கும் பொறி கிளம்பியுள்ளது. நேற்று காலையில் இருந்தே எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும், லிபியாவின் பெங்சாய் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும் ஆயிரக்கண...

நபிகள் நாயகத்தையும், இஸ்லாத்தையும் நிந்திக்கும் திரைப்பட சூத்திரதாரிகளுக்கு பலத்த கண்டனம்! -ரவூப் ஹக்கீம்-

Image
நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களை மிகவும் கீழ்தரமாக சித்திரிப்பதோடு இஸ்லாத்தை அவமதிக்கும் ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ என்ற அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தையும் அதன் சூத்திரதாரிகளையும் தாம் வன்மையாக கண்டிப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நபிகள் நாயகத்தையும், இஸ்லாத்தையும் நிந்திக்கும் பிரஸ்தாப அமெரிக்க திரைப்படத்தின் முன்னோட்டத்தை தாம் இணையத்தளத்தில் பார்வையிட்டதாகவும், அதில் இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வேடந்தரித்து நடிப்பவர் ஒழுக்க மாண்புகளில் அக்கறையற்ற விரச உணர்வை தூண்டக்கூடியவராக பெண்கள் மத்தியில் நடந்து கொள்வதாக அருவருப்பாக காண்பிக்கப்படுவதை அறவே சகித்துக்கொள்ள முடியாததாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டும் அமைச்சர் ஹக்கீம், பலத்த கண்டனத்திற்குரிய இத் திரைப்படம் மத்திய கிழக்கு அரபு நாடுகளிலும் பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளிலும் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பலைகளையும், ஆர்ப்பாட்டங்களையும் ஏற்கனவே தோற்றுவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்...

Daily Hadhis

Oru Muslim Matra Muslimukku Sahotharan. Avarukku Aneethi ilaikkavo, Thuroahamilakkavo, Keavala Paduththavo Veandaam -M:5010

Daily Hadhis

Image

Haj 2012

HAJ-2012: immurai Punitha Haj Kadamayai Niraivetra 2800 ilangayarhalukku Vaaippu. ilangayil irunthu 1st Vimaanam 27/09/2012 Sellum.

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்

Image
-நமது செய்தியாளர்- அமெரிக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்களை தவறாக சித்தரித்து  வீடியோ ஒளி நாடா வெளியிட்டதாக கூறப்படுவதை கண்டித்து இன்று (14.9.2012) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் காத்தான்குடி தாறுல் அதர் அத்தவிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் கண்டனப் பேரணியொன்று நடைபெற்றது. காத்தான்குடி தாருல் அதர் அத்தவிய்யா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்டனப் பேரணியில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கண்டனப் பேரணியில் ஈடுபட்டோர் சுலோகங்களை தாங்கியிருந்தனர். ‘எமது உயிரிலும் மேலான தூதரை கேவலப்படுத்தாதே, இதை தட்டிக் கேட்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை எனும் அயோக்கிய நாடுகள் சபை எங்கே, அமெரிக்காவே முகம்து நபியை இழிவு படுத்தும் வீடியோவை உடனடியாக தடை செய், இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளை நிறுத்து, அமரிக்காவே உனது காட்டு மிராண்டித்தன்த்தை இஸ்லாத்தில் காட்டாதே போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை கண்டனப் பேரணியில் ஈடுபட்டிருந்தோர் தாங்கியிருந்தனர். பேரணி பள்ளிவாயல் முன்றலில் ஆரம்பித்து சற்று தூரம் வரை சென்று நிறைவு பெற்றது. பேரணியின் இறுதியில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைய...